இந்தியாவை அந்நிய மண்ணில் அவமானப்படுத்திய ராகுல் காந்தி; பாஜ குற்றச்சாட்டு..!
BJP alleges that Rahul Gandhi has humiliated India on foreign soil
ஜனநாயகம் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதே இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கொலம்பியாவில் பல்கலைக்கழத்தில் பேசியுள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை மீண்டும் அவமதித்துள்ளதாகவும், அவர் மீண்டும் தேசபக்தியை இழந்துவிட்டார் என பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.
ராகுல் கொலம்பியாவில் உள்ள EIA பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய வீடியோவை பகிர்ந்து, பாஜ செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'ராகுல் மீண்டும் அந்நிய மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துகிறார். லண்டனில் நமது ஜனநாயகத்தை அவமதிப்பதில் இருந்து, அமெரிக்காவில் நமது நிறுவனங்களை கேலி செய்வது வரை, இப்போது கொலம்பியாவில், உலகளவில் பாரதத்தை அவமதிக்க அவர் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் அதிகாரத்தை இழந்துவிட்டீர்கள்.
தேசபக்தியை இழக்காதீர்கள். பாஜவை விமர்சிப்பது உங்கள் உரிமையாக இருக்கலாம், ஆனால், உங்கள் மலிவான மற்றும் அற்ப அரசியலுக்காக இந்தியா தாயை அவமதிக்கத் துணிகிறீர்கள். இது கருத்து வேறுபாடு அல்ல. இது அவமானம்.' என்று செய்துகுறிப்பில் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
BJP alleges that Rahul Gandhi has humiliated India on foreign soil