பிபின் ராவத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லும் போது அவர் கடைசியாக கூறியவை.! திக் திக் இறுதி நிமிடங்கள்.!!
bipin rawat last speech ambulance medical staff
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிபின் ராவத் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிபின் ராவத் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவ பணியாளர்கள் அவருடனான கடைசி நிமிட அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து பிபின் ராவத் என தெரியாமலே அவரை ஆம்புலன்ஸில் கொண்டு வந்தோம். அடுத்த சில நிமிடத்தில் கேப்டன் வருணனையும் எடுத்து வந்தனர். இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி வேகமாக புறப்பட்டோம். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போதே தளபதி பிபின் ராவத் இந்தியில் பேசினார். ஆனால் அவர் பேசியது எனக்கு சரியாக புரியவில்லை.

அருகிலிருந்த மருத்துவ அதிகாரியிடம் அவர் இந்தியில் ஏதோ கூறினார். தீவிர நடவடிக்கை எடுத்து தன்னை காப்பாற்றும்படி தளபதி கூறியதாக எனக்கு புரிந்தது. இருவரையும் மருத்துவமனையில் உயிரோடு சேர்த்தோம் என அவசரநிலை மருத்துவமனை உதவியாளர் விக்னேஷ தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
English Summary
bipin rawat last speech ambulance medical staff