சுவாதி மாலிவால் வழக்கு விவகாரம்: கெஜ்ரிவால் உதவியாளரின் காவல் மீண்டும் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சுவாதி மலிவால் கடந்த மாதம் 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். 

அப்போது கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டெல்லி காவல் துறையிடம் சுவாதி புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த மாதம் 15 ஆம் தேதி பிபவ் குமாரை அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து கைது செய்தனர். தற்போது பிபவ் குமார் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிபவ் குமாரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து டெல்லி நீதிமன்றத்தில் அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை ஜூலை 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bibhav kumar custody extended


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->