வரி ஏய்ப்பு செய்த பிபிசி செய்தி நிறுவனம்?! வருமான வரித்துறை அதிரடி அறிக்கை! - Seithipunal
Seithipunal


டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் அரசு ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவிலும் தனது சேவையை செய்து வருகிறது. குறிப்பாக தமிழில் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகவே செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக இரண்டு ஆவணப் படங்களை பிபிசி நிறுவனம் வெளியிட்டிருந்தது. 

அதில், இந்திய பிரதமரும் அப்போதைய குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆவண படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காலை 11:30 மணியளவில் வருமானவரித்துறையினர் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். 

பிபிசி அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்த நிலையில், 60 மணி நேர சோதனை இன்று நிறைவடைந்தது.

இந்நிலையில், சோதனை குறித்து வருமான வரித்துறை சற்றுமுன் விடுத்துள்ள அறிக்கையில், பிபிசி குழும நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும், இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சோதனையின்போது பிபிசி ஊழியர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் உரிய நேரத்தில் விவாதிக்கப்படும் என்றும், குறிப்பிட்ட சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BBC ITRaid info


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->