இந்தியாவில் உணவு பஞ்சம் வர கூடும்! வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கும்! - Seithipunal
Seithipunal


பாபா வாங்காவின் இந்த ஆண்டுக்கான இந்தியா குறித்து கணிப்பு தற்போது வைரலாகி வருகிறது! 

பல்கேரியன் நாட்டைச் சேர்ந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா. வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகா எனும் இடத்தில் 1911 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85 வது வயதில் காலமானார். இவர் வாழ்நாளில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல்வேறு தகவலை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார். அவற்றில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நடந்துள்ளதாக தெரிய வருகிறது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் வெடிப்பு, இளவரசி டயானாவின் மரணம், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, 2004ல் ஏற்பட்ட சுனாமி ஆகியவை முன்கூட்டியே கணித்துள்ளார்.

2022-ல் சில நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறியிருந்தார். அதேபோல் இத்தாலி மற்றும் ஐரோப்பிய கண்டங்களிலும் மோசமான வளர்ச்சி காணப்பட்டது. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என கூறியிருந்தார் அதேபோன்று ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கியது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவை குறித்து கணிப்பு தற்போது பேசும் பொருளாகிறது. உலகில் வெப்பம் குறைவதால் வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களை தாக்கும் என்றும் கணித்துள்ளார்.

இந்த வெட்டுக்கிளி தாக்குதலினால் பயிர்கள் அதிகம் சேதம் ஏற்பட்டு பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் இவ்விஷயம் பேசும் பொருளாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baba Vanga prediction about India for this year is now going viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->