பெட்ரோல் டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பிய நபரை - கடுமையாக கண்டித்த ராம்தேவ்..! - Seithipunal
Seithipunal


ஹரியாணாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையைக் குறித்து கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவரை யோகாகுரு பாபா ராம்தேவ் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த பத்து நாட்களில் லிட்டருக்கு 6.40 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு ராம்தேவ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது அவரிடம் நிருபர் ஒருவர், "இந்த தேசத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 40 ரூபாயும், கேஸ் விலையை சிலிண்டருக்கு 300 ரூபாயும் என குறைப்பவர்கள் ஆட்சியை மக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ராம்தேவ், "ஆமாம் நான் தான் தெரிவித்தேன். அதற்கு என்ன? உன்னால் என்ன செய்ய முடியும்? நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க உனக்கு ஒப்பந்தப்பட்டிருக்கிறேனா? இது மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டாம். " என்று கடுமையாக எச்சரித்தார்.

ஆனால் அந்த நிரூபர் மீண்டும் அதே கேள்வியை முன்வைக்க இந்த முறை ஆத்திரமடைந்த ராம்தேவ், "நான் தான் அன்றே கூரினேன். உன்னால் என்ன செய்ய முடியும். இப்படி கேள்வி கேர்ப்பதை நிறுத்து. நீ நல்ல பெற்றோருக்குத் தான் பிறந்திருப்பாய் என நினைக்கிறேன்" என்று ராம்தேவ் கடுமையாக கூறினார்.

"எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் வரி கிடைக்காது என அரசாங்கம் சொல்கிறது. வரி சரிவர கிடைக்காவிட்டால் தேசத்தை எப்படி வழிநடத்துவது? சாலைகள் எங்கிருந்து வரும்? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட எப்படி தான் கொடுக்க முடியும். விலைவாசி குறைய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று ராம்தேவ் தெரிவித்தார். 

ஆனால், மக்களும் கடுமையாக உழைக்க வேண்டுமல்லவா? நான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்" என்று ராம்தேவ் தெரிவித்தார்.

அவரது இந்த விமர்சனம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

baba ramdev say about petrol diesel


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->