அயோத்தியில் பிரதமர் மோடியை மலர் தூவி வரவேற்ற இக்பால் அன்சாரி! - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோவில் நில வழக்கில் இஸ்லாமியர்களின் தரப்பு மனுதாரரான இக்பால் அன்சாரி, அயோத்தி வந்த  பிரதமர் மோடி மீது ரோஜா இதழ்களை தூவி வரவேற்றுள்ள நிகழ்வு அனைவரின் கனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்று முன்தினம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் அந்த விமான நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'அயோத்தி தாம்' ரயில் நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் ஊர்வலமாக சென்றார்.

காரின் பக்கவாட்டில் தொங்கியபடி சென்ற பிரதமர் மோடியை, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். 

குறிப்பாக அயோத்தி ராமர் கோவில் நில வழக்கில் இஸ்லாமியர்களின் தரப்பு மனுதாரரான இக்பால் அன்சாரி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, பாஞ்சி தோலா என்ற இடத்தில் பிரதமர் மோடியை ரோஜா இதழ்களை தூவி வரவேற்றார்.

இந்த வரவேற்பு குறித்து ஊடகம் ஒன்றுக்கு இக்பால் அன்சாரி தெரிவிக்கையில், "நம்முடைய இடத்துக்கு வந்துள்ள பிரதமர் மோடி நம்முடைய விருந்தினர் மட்டுமில்லை, நம் நாட்டின் பிரதமர். என் வீட்டுக்கு முன்பு வந்த அவர் மீது மலர் தூவி வரவேற்றேன்” என்றார்.

முன்னதாக உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியதையடுத்து, ராமர் கோயில் பூமி பூஜை போடுவதற்கான முதல் அழைப்பிதழ்  அன்சாரி இக்பாலுக்குதான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayothi case Ansari warm welcome to pmmodi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->