அசாம் வெள்ளம் : ஜூன் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் 33 மாவட்டங்களில் மொத்தம் 55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

அதன்காரணமாக, பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடைநிலைக் கல்வித் துறை, அசாம் அரசின் அனைத்து தொடக்க, மேல்நிலை, மூத்த மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை 5 நாட்களுக்கு முன்னரே அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அசாமில் பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் 31 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்து வருகின்றன. தொடர் மழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அசாமின் பல மாவட்டங்களில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கௌஹாத்தி பல்கலைக்கழகம் நடத்தும் சில தேர்வுகள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கான உடற்தகுதி தேர்வு உட்பட பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam flood summer holidays extented June 25


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->