பீகாரில் ராணுவ பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.!! - Seithipunal
Seithipunal


ஈகா மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக கஞ்சன்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ராணுவ பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. 

இதில் ஒரு பெண் விமானி உட்பட இருவர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தயாவிலுள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் சிறிய ரக பயிற்சி விமானம் இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army training flight met accident in Bihar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->