பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ஆளுநர் பதவி..!! - Seithipunal
Seithipunal


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா முழுவதும் 13 மாநில ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரும் சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பாஜக மற்றும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள முக்கிய நபர்களை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாநில ஆளுநர்களாக நியமித்து வருகிறார்.

தற்பொழுது வரை 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh governor post for judge in Babri Masjid demolition case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->