மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்... மதுபாட்டில்களின் விலை திடீர் உயர்வு!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்ற உடன் மதுபான கடைகள் தனியாரிடம் இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

ஆந்திர அரசுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் மது விற்பனை மூலம் ரூ. 1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மதுபான விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஆந்திரா அரசு பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தி வருகிறது. 

மதுபான விற்பனை குறித்து கணக்கெடுப்பு நடத்தி எந்த வகை மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது எனவும்  மது பிரியர்கள் அதிக அளவில் எந்த வகையான ஆல்கஹால் அருந்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் எனவிம் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ, 10 முதல் ரூ. 40 வரையிலும் ஃபுல் பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரி. 90 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதிக அளவில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்பனையாகாத மதுபானங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra alcohol price sudden increase 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->