BBA, BCA படிப்புகளுக்கு ஆப்பு.. இனி இது கட்டாயம்.. UGC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இனி பிபிஏ, பிசிஏ படிப்புகளை பயிற்றுவிக்கும் அனைத்து கல்லூரிகளும் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் மாணிக் ஆர் ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் "தொழில்நுட்பக் கல்வி மற்றும் அது தொடர்பான படிப்புகளை ஏஐசிடிஇ வரையறை செய்வதுடன் கண்காணித்து வருகிறது.

தொழில்நுட்ப கல்வியின் என்பது பொறியியல் தொழில்நுட்பம் நகர திட்டமிடல் கட்டிடக்கலை மேலாண்மை மருத்துவம் பயன்பாட்டு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த படிப்புகள் ஆகும். அதன் அடிப்படையில் எம்பிஏ,  எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளை ஒழுங்குப்படுத்தி அதற்கு அங்கீகாரம் வழங்கும் பணிகளை ஏசிஐடிஇ தற்போது மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வரும் கல்வி ஆண்டு முதல் பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பிசிஏ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கு ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. கல்வி தரத்தை முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகளில் ஒரே மாதிரியாக பராமரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.‌

இந்த தகவலை அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் தங்கள் கீழ் இளங்கும் இணைப்பு கல்லூரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிபிஏ, பிசிஏ படிப்புகளை அனுமதிக்கோரி கல்வி நிறுவனங்கள் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது நிறுவனங்களுக்கு கல்வி நிறுவனங்கள் https://www.aicte-india.org/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AICTE approval was mandatory for BBA BCA course


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->