நீட் தேர்ச்சி இல்லாமலேயே கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நீட் தேர்ச்சி இல்லாமலேயே கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு - எங்குத் தெரியுமா?

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஹாசன்பூரில் எம்.ஆர். கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்.சி. மற்றும் ஏ.எச். என்னும் கால்நடை மருத்துவப் படிப்புகளை படிக்கலாம். 

இந்தக் கல்லூரியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர். கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவ மாணவிகள் அட்மிஷன் பெற்றுள்ளனர். 

இந்த கல்லூரியில் படிப்பதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே மட்டும் போதுமானது. நீட் தேர்ச்சி தேவையில்லை. கால்நடை மருத்துவம் படித்திருந்தால் பல்வேறு மத்திய மாநில அரசு வேலைகளில் சேரலாம். தனியாக கால்நடை மருத்துவமனையும் அமைக்கலாம். 

இந்த படிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டால் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரியலாம். இந்தப் படிப்பிற்கு வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இங்கு கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி உட்பட ஆண்டு கட்டணம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே. இந்தக் கல்லூரியில் சேருவதற்கு வரும் 1-ம் தேதி இறுதி நாளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

addimission going on hasanpur MR college hariyana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->