மட்டன் குழம்பு குறைவாக தந்ததால் ஆத்திரத்தில் சிறை அதிகாரிகளைத் தாக்கிய கைதி.! - Seithipunal
Seithipunal


மட்டன் குழம்பு குறைவாக தந்ததால் ஆத்திரத்தில் சிறை அதிகாரிகளைத் தாக்கிய கைதி.!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பூஜப்புரை பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் உள்பட மொத்தம் 1500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பூஜப்புரை சிறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைதிகளுக்கு மதிய உணவுடன் மட்டன் குழம்பு வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது வயநாட்டைச்சேர்ந்த முகம்மது பைஜாஸ் என்ற கைதி தனக்கு மட்டன் குழம்பு குறைவாக வழங்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பைஜாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இருப்பினும் சமாதானம் ஆகாத கைதி பைஜாஸ் சிறை அதிகாரிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினார்.

இதில் துணை கண்காணிப்பாளர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புஜப்புரை சிறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் பைஜாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accuest attack jail officers in thiruvanathapuram central jail


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->