சிறைக்குள்ளேயே...? அலறியடித்த பெண் மருத்துவர்.! பாலியல் வன்கொடுமை முயற்சி.! - Seithipunal
Seithipunal


ஒரு கைதி சிறைக்குள் வைத்து பெண் மருத்துவர் ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

டெல்லியில் இருக்கும் மண்டோலி சிறையில் கைதிகளுக்கு மருத்துவம் பார்க்க பெண் மருத்துவர் ஒருவர் இருக்கின்றார். நேற்று முன் தினம் அவர் வழக்கம் போல கைதிகளை பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது, பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒரு கைதியை பரிசோதனை செய்தபோது அவரை குளியல் அறைக்குள் தள்ளி அந்த கைதி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

உடனே, மருத்துவர் அலறி அடித்ததால் அங்கிருந்த சிறை காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கைதியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே, பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற கைதி அங்கே வந்த பெண் மருத்துவரையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Prisoner Trying to rape lady Doctor in jail


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->