பால் கறக்கல.. எட்டி உதைக்கிறா.. ஜெயில்ல புடிச்சி போடுங்க சார்.. பசுக்கள் மீது காவல்நிலையத்தில் புகார்..! - Seithipunal
Seithipunal


பால் கறக்க விடாத பசு மாட்டின் மீது விவசாயி ஒருவர் புகார் அளித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. 
 
காவல்நிலையத்தில் பெரும்பாலும் குற்ற சம்பவங்கள் சட்டவிரோத சம்பவங்கள் குறித்து தான் புகார் அளிப்போம் ஆனால் கர்நாடக மாநில விவசாயி ஒருவர் தனது பசும்பால் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாலிகிராம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையா விவசாயியான இவர் தனது வீட்டில் நான்கு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் பசு மாடுகளிலிருந்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் திடீரென ராமையா பால் கறக்க முயன்றால் எட்டு உழைத்து விடுகின்றன.

கடந்த ஐந்து நாட்களாக பால் கறக்கும் போது மட்டும் அந்த மாடுகள் அவரை உதைத்து விடுகின்றனர் அடக்க முயன்றால் பால் சுரக்கவில்லை என்று கூறப்படுகிறது ஆனால் அதுவே அவரது மனைவி கரந்தால் மாடுகள் ஏதும் செய்யவில்லை. இதனால் வெறுத்துப்போன ராமையா காவல் நிலையத்தில் சுவாரசியமான புகார் ஒன்றை அளித்தார்.

தனது 4 மாடுகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றார் இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த காவல்துறையினர் விஷயத்தைக் கேட்ட போது அவர் நடந்தவற்றை கூறவே காவலர்கள் ஆடிப்போய்விட்டேன் பின்னர் ரம்யாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A farmer who complained to the police about the cows


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->