கர்நாடகாவில் 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்குவதை தடுக்கும் பணியில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்களை பறிமுதல் செய்தனர். 

அதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் வருகிற 26 மற்றும் மே 7-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

98 crores worthable beer bottles seized in karnataga


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->