விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்கினல் வைப்பதற்கு தடை.!  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் முதல் கட்டமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத் உள்பட 13 நகரங்களில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்புத்துறை "விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவையை வழங்கக் கூடாது" என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து, மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், "விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுரங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே  5ஜி சிக்னல் அமைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5g signal ban in near airport central government allounce


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->