30 வார கர்ப்பம்… டீன் ஏஜ் பெண்ணின் விருப்பமே முதன்மை: கருக்கலைப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி...!
30 weeks pregnant teenage girl wishes paramount Supreme Court grants permission abortion
மகாராஷ்டிராவை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக கர்ப்பம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டு நண்பருடன் பழகிய நிலையில் உருவான இந்த கர்ப்பம், தற்போது 30 வாரங்களை கடந்துள்ளது. இப்போது 18 வயது 4 மாதங்கள் ஆன அவர், சட்ட ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த குழந்தையை பெற்றெடுக்கத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரும் இதற்கு ஒப்புதல் அளிக்காததால், கருவை கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினர்.இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அவசரமாக விசாரித்தது.
விசாரணையின் போது, “தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஏற்பட்ட இந்த கர்ப்பம், ஒரு டீன் ஏஜ் பெண்ணின் எதிர்காலத்தையே பாதிக்கும் வகையில் உள்ளது.
குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா வேண்டாமா என்பது முதன்மையாக தாயின் தனிப்பட்ட உரிமை. இன்னும் பிறக்காத கருவை விட, அந்த பெண்ணின் உடல் மற்றும் மனநல உரிமைகளே மேலானவை,” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இறுதியாக, மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி, 30 வார கருவை கலைக்க மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு, பெண்களின் உடல் சுயாதீனம் மற்றும் தேர்வு உரிமை குறித்து முக்கியமான சட்ட நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.
English Summary
30 weeks pregnant teenage girl wishes paramount Supreme Court grants permission abortion