நிலச்சரிவில் சிக்கிய அரசு பள்ளி - 27 மாணவர்கள் பலி; 23 மாணவர்கள் மாயம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ந்தேதி மூன்று இடங்களில் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பலரது உடல், ஆற்றில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை கிடந்தது. பல உடல்கள் ஆற்றில் பாறைகளுக்கு உள்ளேயும், மரங்கள் உள்ளிட்ட குப்பைகளுக்குள்ளும் கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. 

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு மட்டும் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மட்டுமின்றி இரண்டு அரசு பள்ளிகளும் கடுமையான சேதமடைந்துள்ளன. அந்த பள்ளிகளைச் சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் மற்றும் பாறைகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் பலியாகி இருக்கின்றனர். இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த 27 மாணவர்கள் பலியாகினர். மேலும், 23 மாணவர்களை காணவில்லை. இந்த பள்ளிகளில் படித்து வந்த குழந்தைகளில் பலர் குடும்பத்தோடு பலியாகி இருக்கின்றனர். 

பல குழந்தைகளின் உடல்களை அந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு தெரிவித்துள்ளனர். அவர்கள் குழந்தைகளின் உருக்குலைந்த உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 students died and 23 students missing in kerala landslide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->