மஹாராஷ்டிராவில் பரபரப்பு - தொழிற்சாலைகளில் ரூ.250 கோடி போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள சில தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.300 கோடி மதிப்புள்ள 151 கிலோ மெபட்ரோன் போதைப்பொருள் சிக்கியது. 

இந்த நிலையில் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் சில இடங்களில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கும், குற்றப்பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் படி வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரக அதிகாரிகளும், போலீசாரும் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிட வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருவரின் வீட்டில் இருந்து 23 கிலோ கொகைன், சுமார் 2.9 கிலோ மெபட்ரோன் மற்றும் ரூ.30 லட்சம் பணம் உள்ளிட்டவை சிக்கியது. 

இதேபோல் பைதான் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள மகாலட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலையில் இருந்து 4.5 கிலோ மெபட்ரோன், 4.3 கிலோ கேட்டமைன் மற்றும் 9.3 கிலோ கொண்ட மற்றொரு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்ததில் ஒருவர் போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

250 crores drugs seized in maharastra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->