பொதுமக்களே கவனம்.. மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, மே மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.

2023 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்:

மே 1 - உழைப்பாளர் தினம்

மே 5 - புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா குறிப்பிட்ட மாநில வங்கிகளுக்கு விடுமுறை

மே 7 - ஞாயிற்றுக்கிழமை

மே 9 - ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்

மே 13 - 2வது சனிக்கிழமை

மே 14 - ஞாயிற்றுக்கிழமை

மே 16 - சிக்கிம் தினம்

மே 21 - ஞாயிற்றுக்கிழமை

மே 22 - மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 24 - காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி - திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 27 - 4 - வது சனிக்கிழமை

மே 28 - ஞாயிற்றுக்கிழமை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 May month 12 days holiday to Bank


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->