பீகார் : இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலி.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பீகாரில் இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல் தாக்கியதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பீகார் மாநிலத்தில் கடந்த 17ந்தேதி, இடி, மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். 

மேலும், பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார். வானிலை மோசமடைந்துள்ள சூழலில், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 killed in thunder and lightning strike in bhihar Chief Minister's relief announcement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->