ஓட்டப்பந்தயத்தில் 2வது இடம்பிடித்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்.! - Seithipunal
Seithipunal


ஓட்டு பந்தயத்தில் பங்கேற்று 2வது இடம் பிடித்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் துமகூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பீம் சங்கர். இவன் தனது பள்ளியில் தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதில், போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே சிறுவன் பீம் சங்கருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுவனுக்கு தண்ணீர் குடிக்க வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில் போட்டியில் இரண்டாவது வந்த சோகத்தில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 years old boy heart attack death in Karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->