ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ஜூலை மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.

2023 ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்:

ஜூலை 2 – ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 5 – குரு ஹர்கோவிந்த் சிங் ஜெயந்தியை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை

ஜூலை 6 - MHIP தினம் காரணமாக மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை

ஜூலை 8 – 2வது சனிக்கிழமை

ஜூலை 9 – ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 11- கேர் பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகளுக்கு விடுமுறை

ஜூலை 13- பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை

 

ஜூலை 16- ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 17- உ திரோத் சிங் தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகள் விடுமுறை

ஜூலை 22- நான்காவது சனிக்கிழமை

ஜூலை 23- ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 29- மொஹரம் பண்டிகை

ஜூலை 30- ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 31- தியாகி தினத்தை முன்னிட்டு ஹரியானா, பஞ்சாபில் வங்கிகளுக்கு விடுமுறை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 days bank holidays in July month


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->