வைரஸை தடுக்க ஊமத்தம் காய்களை சாப்பிட்ட 12 பேர்! பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!  - Seithipunal
Seithipunal


லக நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்த கொடூர வைரஸானது பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் வைரஸின் அச்சத்தால் வெளியே செல்லாமல் மத்திய அரசின் உத்தரவுக்கு கீழ் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். 

இன்றளவிலும் இந்த வைரசுக்கு உரிய மருந்தை கண்டுபிடிக்காத நிலையில், மலேரியாவுக்கு பயன்படுத்திய hydroxychloroquine மருந்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் இந்த வைரஸ் காண மருந்து குறித்த பலவித வதந்திகள் பரவி வருகின்றன. 

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சித்தூர் மாவட்டத்தில் உள்ள அலபள்ளி கிராமத்தில் வசித்து வரும் லோகேஷ் (23) இவர் டிக்டாக்கில் ஒரு வீடியோவை பார்த்து ஊமத்தம் காய்களை சாப்பிட்டால் இந்த நோய் தொற்று ஏற்படாது என்று கூறியதை நம்பி அவரது கிராமத்தை சேர்ந்த 12 பேரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த கொடூர வைரஸில் இருந்து தப்பிக்க ஊமத்தம் காய்களை சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்தக் காய்களில் உள்ள விஷத்தன்மையை அனைவரும் உடல்நிலை கவலைக்கிடமாக மாறி, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நம்பி நம்பகமற்ற காய்களையும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இவ்வாறான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே அரசும் மருத்துவர்களும் பரிந்துரைக்காத எவ்வித மருந்துகளையும் தேவையின்றி உட்கொள்ளாமல் இருப்பது தான் நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 members admitted in hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->