ராமர்கோவில் குடமுழுக்கு - நாடு முழுவதும் 1000 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். 

மேலும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலிருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதன்படி அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் சுமார் 100 நாட்களுக்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு 1,000 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

அதாவது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே, அதிக அளவிலான பயணிகளை கையாளும் வகையில் அயோத்தி ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 special train run for ramar temple kumbabishegam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->