எலும்புகள் வலுவாக வேண்டுமா?.! அப்போ இந்த உணவு பொருட்களை நீங்கள் கண்டிப்பா சாப்பிடனும்..!! - Seithipunal
Seithipunal


நமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சில ஊட்டசத்துக்கள் அவசியம் தேவைப்படுகின்றன.குறிப்பாக எலும்புகளுக்கு சில வேளைகளில் கால்சியம் மட்டும் போதாது வைட்டமின் டி, புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துகளை சேர்க்க வேண்டும். தற்போது எலும்புகளை வலுபடுத்த என்னென்ன ஊட்டசத்துக்கள் சேர்த்து கொள்ள வேண்டும் என பார்போம்.

கேல்ஷியம்: எலும்புகளை வலுவாக்க கேல்சியம் அடிப்படை தேவையாக உள்ளது. பால் பொருட்களான வெண்ணெய், நெய், தயிர் போன்றவற்றில் இருந்து கேல்சியம் பெறலாம். ப்ரோகோலி, சால்மன் மீன், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றில் உங்களுக்குத் தேவையான கேல்ஷியம் சத்தைப் பெறலாம்.

வைட்டமின் – டி: வைட்டமின் டி இருந்தால் மட்டுமே நமது உடலால் கேல்ஷியத்தை கிரக்கிக்க முடியும் மாலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே, அன்றாட வைட்டமின் டி தேவை பூர்த்தியாகிவிடும். இது மட்டுமின்றி, புளிக்கவைக்கப்பட்ட மாவு மற்றும் கிரில் செய்யப்பட்ட சால்மன் மீன், காளான் போன்றவற்றிலும் வைட்டமின்- டி உள்ளது.

புரதம்: எலும்பு ஆரோக்கியத்திற்கு புரதம் மிகவும் முக்கியமான ஒன்று. பால் பொருட்கள் உட்பட, விதைகள், வேர்கடலை, கொண்டை கடலை, பட்டாணி, ராஜ்மா, மொச்சை, டோஃபு, பனீர், கொய்யா ஆகிய உணவுகளில் இருந்து புரதச்சத்தைப் பெறலாம்.

மக்னீசியம் மற்றும் பொட்டாசியம்: எலும்பை வலுவாக்க மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அவசியமான ஒன்றாகிறது. இவை விதைகள், கொட்டைகள், பாலக்கீரை, வாழைப்பழம், சோயா ஆகிய உணவுகளில் காணப்படுகின்றன. அவற்றை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

இதுமட்டுமின்றி வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ ஆகிய வைட்டமின்களும் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nutritious food for strengthening boan health


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->