இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனாவின் 3-வது அலை தாக்கும்.. ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். மேலும், முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. இதனால் மூன்றாவது அலை என்பது தவிர்க்க இயலாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. 

நோய் எதிர்ப்பாற்றலை மீறி பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ், மூன்றாவது அலையின் பாதிப்பு இன்னும் பெரிதாக இருக்கும். சில கட்டுப்பாடுகளை நீட்டித்து, அதைப் பின்பற்றினால் பாதிப்பை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிப்பதாக  எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான மருத்துவர் சமீரன் பாண்டா, நாடு தழுவிய அளவில் மூன்றாவது அலை இருக்கக்கூடும் என்றாலும், அதற்காக இரண்டாவது அலையை போல அது  தீவிரமானதாகவோ அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கும் என அர்த்தமில்லை என தெரிவித்துள்ளார். 

மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்வது, முதல் இரண்டு அலைகளின் பொது மக்களிடையே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை மீறி பரவக்கூடிய உருமாற்றமடைந்த டெல்டா வகை வைரஸ் ஆகிய நான்கு காரணங்களால் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாவது அலையை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICMR says corona 3rd wave in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->