கண்கள் மற்றும் கண்களை சுற்றி உங்களுக்கு இவ்வாறு உள்ளதா?.! பெரிய பிரச்சனையாக கூட இருக்கலாம்.. கவனம் தேவை.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நிலையில் பலரும் பெரும்பாலான வியாதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அவ்வாறு பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகும் நபர்கள் முதலிலேயே தங்களின் உடல் மாற்றத்தை அறிந்து செயல்படும் பட்சத்தில்., பல விதமான பின்னாளில் ஏற்படும் பதிப்புகளில் இருந்து தப்பிக்க இயலும். அவ்வாறு உடல் மாற்றத்தை கண்டு எவ்வாறு உடல் பிரச்சனைகளை கண்டறிவது குறித்து இனி காண்போம். 

நமது கண்கள் உப்பியிருக்கும் பட்சத்தில்., சிறுநீரகங்களின் பாதிப்புகளை நமக்கு உணர்த்துகிறது. சிறுநீரகம் என்பது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்து வருகிறது. அவ்வாறு தனது பணியை சிறுநீரகத்தில் செய்ய முடியவில்லை என்ற பட்சத்தில்., உடலில் இருக்கும் அசுத்தமான நீரானது வெளியேற முடியாமல் கண்களை சுற்றி தங்கி., கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனை இருக்கும் பட்சத்தில்., உணவில் உப்பை குறைத்து கொண்டு., அதிகளவு நீரை அருந்த வேண்டும். 

கண்களின் இமைகளில் அதிகளவு வலி ஏற்படும் பட்சத்தில்., அதிகளவு பணிசுமையின் காரணமாக கண்களின் இமையில் வலி ஏற்படுகிறித்து. அதிகளவு பணியின் காரணமாக உடலில் மக்னீசியத்தின் அளவு குறைந்து கண்களின் வலியையும்., உடற்சோர்வையும் எப்படுத்துகிறது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு உணவில் அதிகளவு முட்டைகோஸ் மற்றும் கீரை வகை உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். 

கண்களில் அதிகளவு வெளிச்சம் தெரியும் பட்சத்தில்., அதிகளவு வேலைகளை உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வை அளிக்காமல் பணியாற்றும் சமயத்தில்., நமது மூளையானது குழப்பமடைந்து தவறான தகவலை தொடர்ந்து கண்களுக்கு அனுப்புகிறது. இதன் காரணமாக கண்களில் திடீர் வெளிச்சமும்., சிறு சிறு புள்ளிகள் போன்றவையும் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு சிறிது நேரம் எழுந்து நிற்பது மற்றும் அதிகளவு காபி குடிக்கும் பழக்கம் இருப்பின்., அதனை கைவிட வேண்டும். 

கண்கள் தீடீரென உலர்ந்து போகும் பட்சத்தில்., நாம் அன்றாடம் குளிர்சாதன அறைகளில் அதிக நேரத்தை செலவிட்டு பணியாற்றி வரும் காரணத்தால்., கண்கள் அதிகளவு களைப்புடன் உலர்ந்து பாதிப்பை அடிக்கிறது. இதனை தவிர்ப்பதற்கு தினமும் கண்டிப்பாக எட்டு மணிநேரம் உறங்க வேண்டும். இதுமட்டுமல்லாது கண்களை மேலும் கீழும் மற்றும் பக்கவாட்டு திசையிலும் அசைத்து கண்களுக்கு சிறிது பயிற்சியை அளிக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to find to compare eyes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->