மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் எளிய உணவு முறைகள் இதோ.! - Seithipunal
Seithipunal


முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவுப் பழக்கம் தான் என கூறப்படுகிறது. இதில் மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள், நார் சத்து, இரும்பு சத்து பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.‌ அதன் காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

பால் சார்ந்த பொருட்களில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அவற்றில் எந்த உணவுப் பொருட்களில் கொழுப்பு குறைவாக உள்ளதோ அவற்றை தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது.

சிறுதானியங்களில் நார் சத்து அதிகமாக உள்ளது. இது இதய நோய் மற்றும் நீரழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது. அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

மேலும் கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேர்வு செய்து உண்ண வேண்டும். குறிப்பாக எண்ணெய் உணவுப் பொருட்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to avoid heart attack in foods


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->