“தேன் எத்தனை ஆண்டுகளானாலும் கெடாது” — இதன் ரகசியம் என்ன?
Honey never goes bad no matter how many years it been around what the secret
பழமொழியாகக் கேட்டிருக்கிறோம் — தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது என்று. உண்மையா அது? ஆம்! தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய கல்லறைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தேன் ஜாடிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆச்சர்யமாக, அந்த தேன் இன்னும் சுவைக்கக்கூடிய நிலையில் இருந்தது!
அப்படியென்றால், தேன் கெட்டுப்போகாமல் இருக்க காரணம் என்ன?
முதலில், தேன் மிகக் குறைந்த ஈரப்பதத்தை கொண்டுள்ளது. நீர் குறைவாக இருப்பதால் பாக்டீரியா, பூஞ்சை வளர்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.அடுத்து, தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது. அதுவும் நுண்ணுயிர்கள் வளர்வதைத் தடுக்கிறது.
மேலும், தேனீக்கள் தேனை உருவாக்கும் போது சிறப்பு என்சைம்கள் சேர்க்கின்றன. அவை ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்து, இயற்கை கிருமிநாசினியாக செயல்படுகின்றன.
இதனால் தான் தேன் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் கெடாமல் சுவைக்கக்கூடியதாக இருக்கும். சரியாக மூடி, தூய்மையாகப் பாதுகாக்கப்பட்ட தேன், காலம் கடந்தும் தனது தன்மையை காக்கும் அற்புத இயற்கை உணவாக திகழ்கிறது.
English Summary
Honey never goes bad no matter how many years it been around what the secret