மழைக்காலத்தில்.. சளி தொல்லைகளை வீட்டிலேயே குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


மிகவும் சிறப்பான கிருமி நாசினியாக மஞ்சள் இருக்கிறது. இதை பாலுடன் சேர்த்தால் அது மருந்தாக மாறும். நன்றாக பாலை காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகினால் சளி தொல்லை நீங்கும். குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருமே இதை எடுத்துக் கொள்ளலாம். 

மிளகு நாள்பட்ட சளி, இருமலை போக்க சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருள். உணவில் காரத்திற்காக மிளகாய், வத்தல் உள்ளிட்டவை சேர்க்காமல் அதற்கு பதில் மிளகு சேர்த்துக் கொள்வது நல்லது. 

அன்றாடம் மிளகு ரசம் வைத்து மதிய வேலைகளில் எடுத்துக் கொள்வது உடல் நலத்தை மேம்படுத்தும். சுத்தமான தேன் சளியை குணப்படுத்த கூடும். 100 மி.லி தேனை வானலியில் ஊற்றி அதனுடைய அடர்த்தி குறையும் வரை நன்றாக சூடேற்ற வேண்டும். 

அதன் பின் அதில் இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர சளி தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். வெங்காயத்தை உரித்து நசுக்கி எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஆற வைத்து குடித்தால் சளி தொல்லை சற்று நேரத்தில் நீங்கும். 

சிறிது இஞ்சியை எடுத்து நசுக்கி அதில் உப்பு போட்டு பத்து நிமிடம் கழித்து அதில் துளசியையும் சேர்த்து வாயில் வைத்து மென்றால் சளி, இருமல் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cold issue cleared by natural way


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->