அடும்புக்கொடியின் நன்மைகள் என்னென்ன?.. உப்பு நீரின் உவர்ப்பை சரி செய்யும் மகத்துவம்.! - Seithipunal
Seithipunal


ஆற்றங்கரையோரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் இயற்கையாக கடலோரை கொடி வளர்ந்து இருக்கும். இந்த கடலோரை கை, கால் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகவும், விளைநிலத்தில் உள்ள உப்புத்தன்மையை நீக்கவும் பயன்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயற்கையாகவே பல மூலிகைகள் இருக்கிறது. 

நமது சொல் வழக்கில் உள்ள அடும்பு, அடம்பு, அடைப்பங்கொடி, அடும்புக்கொடி என குறிப்பிடப்படும் மூலிகையை சித்த மருத்துவத்தில் கடலாரை, காட்டரை என்று கூறப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு கபிலர் குறிப்பிட்டுள்ள 99 மலர்களில், இக்கொடி மலரும் ஒன்றாகும்.

இந்த கொடி குதிரையின் கழுத்து மணியை போல பார்ப்பதற்கு இருக்கும். செந்நீல நிறம் கொண்ட இம்மலர், மணல் அரிப்புக்களை தடுக்க பயன்படுகிறது. இதன் அடிப்பகுதியில் வலிமையான கிழங்கும் இருக்கும். கடலில் குளித்த பின்னர் பெண்கள் அடும்பு மற்றும் நெய்தல் மலர்களை மாலைகளாக தங்களின் கூந்தலில் பெண்கள் அணிந்து வந்துள்ளனர். இந்த கொடியில் முட்டையிட்டு கடற்காகம் தனது குஞ்சுகளை பொரிக்கும். 

கடலாரையின் வேர் மற்றும் இலை ஆகிய இரண்டும் மருத்துவ குணங்களை கொண்டது. இதன் வேர்ப்பகுதி சிறுநீரக பெருக்கியாக செயல்பட்டு, வயிறு மற்றும் கால்களில் ஏற்படும் தேவையற்ற வீக்கத்தை குறைகிறது. இலை பகுதி மூட்டுவலி, வீக்கம், சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. விளைநிலங்களில் இருக்கும் உவர்தன்மையை சரி செய்ய கடலோரை கொடிகளை வயலில் சிறிதாக வெட்டி நீர் உள்ள பகுதியில் போடுவார்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bay hops Flower Benefits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->