அந்த முடிவை எடுக்க துணிந்த சசிகலா?... சத்தமே இல்லாமல் இருக்க முடிவு?..! 
                                    
                                    
                                   Sasikala May be Join ADMK due to Political Fear Problems 
 
                                 
                               
                                
                                      
                                            அதிமுகவில் கொடுக்கும் பதவியை வாங்கிவிட்டு, அமைதி காக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்துகொண்டே அரசியல் தொடர்பான விவகாரங்களில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது முழு நம்பிக்கையையும் டிடிவி தினகரனின் மீது வைத்திருந்தார். 
கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து அதிகாரபூர்வமாக விடுதலையான சசிகலா, கொரோனா வைரஸ் பரவல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமையில் இருந்து வருகிறார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பும் வழியில், தென்மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளை கார்களிலும், வேன்களிலும் அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை கைப்பற்றி, அதனை மீட்டெடுப்பார் என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், டிடிவி தினகரானால் தொடங்கப்பட்ட அமமுக கட்சி அதிமுகவிற்கு எதிராக தொடங்கப்பட்டது என்றாலும், அதிமுகவை மீட்டெடுக்க அமமுக தொடங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. 
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா உட்கட்சி விவகாரங்கள், அமமுகவின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை கண்டு பெரும் அதிருப்திக்கு உள்ளாகிய நிலையில், டிடிவி தினகரன் மீது கட்சி ரீதியாக கடுமையாக கேள்வி எழுப்பியதால், அந்த ஆத்திரத்தில் டிடிவியும் அதிமுகவினரும் எதிராக சில அறிக்கை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
கடந்த சில நாட்களாக அமைதியாக மவுனம் காத்து வரும் சசிகலா, அரசியல் சூழ்நிலையை உள்வாங்கி இருப்பதாகவும், இப்போதையை சூழ்நிலையில் அதிமுக எதிர்ப்பு அலை, அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற பெயரில் வாக்குகளை மடைமாற்றும் வண்ணம் செயல்பட்டால், ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் எதிரிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்து அதுவே நமக்கு பாதகமாக அமையலாம் என சசிகலா நினைத்து பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. 

திமுக மட்டும் தான் எங்களின் எதிரி என்று அமமுக தரப்பு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய தேர்தலில் வாக்குகளை சிதறடிக்க பல கட்சிகள் புதிதாக களம்காண துவங்கியுள்ளதால், சிறுகச்சிறுக அதிமுக சேர்த்து வைத்த வாக்கு வங்கி, அமமுகவின் என அனைத்தும் பாதிக்கப்படும் என்றும் தெரியவருவதால் அதிமுகவில் மீண்டும் இணைந்து கிடைக்கும் பதவியை வாங்கிக்கொண்டு அமைதி காத்து விடலாம் என்ற முடிவில் சசிகலா இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
மேலும், சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், அவரின் முடிவு குறித்த தகவல் இன்னும் வராததால் அதிருப்தியில் பிற கட்சிகளுக்கு செல்ல முயற்சித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் மாற்றங்கள் என்பது யாரும் எதிர்பாராத வகையில் தான் இருக்கும். அதே போல, அதிமுக - அமமுக என்ன ஆக போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Sasikala May be Join ADMK due to Political Fear Problems