கலெக்டர் ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி.! கடுப்பாக என்ன காரணம்.! - Seithipunal
Seithipunal


ஜூன் 7 ஆம் தேதிசேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில், சேலம் திமுக எம்பி பார்த்திபனும், திமுக எம்.எல்.ஏ.வான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் கலந்துகொண்டனர்,

விழாவில் கலந்துகொண்ட இருவருக்கும் உரிய மரியாதையை வழங்கி விழாவை எடப்பாடி சிறப்பித்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர், எடப்பாடி சேலம் கலெக்டர் ரோகிணியிடம் உரையாடியுள்ளார். 

அதில், " எனக்கு தெரியாமல் என்ன ஏற்பாடெல்லாம் நடக்குது இங்க? பார்த்திபன் எம்பியா ஜெயித்தவர் தான் ஆனா இன்னும் பார்லிமென்ட் கூட்டல. அவருக்கு பதவியும் கொடுக்கல. இவரை யாரு இந்த விழாவுக்கு கூப்பிட்டது என கடிந்துகொண்டுள்ளார். 

அதுக்கு ரோகிணி," உங்களுக்கு நல்ல பேரு  கிடைக்கனுன்னு நாங்க அப்டி செஞ்சோம்னு" சொல்லி இருக்கிறார். அடுத்தது பி ஆர் ஓ வை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எடப்பாடி, " நிகழ்ச்சி நடக்குது யார் யார் கலந்துக்கிறாங்கனு ஒரு தகவலை முன்னாடியே சொல்ல முடியாதா?" என கடுப்பாகி இருக்கிறார். 

அதற்கு, அவர்," ரோகிணி மேடம் தான் ப்ரோகிராம் பத்தின விஷயங்களை கான்பிடென்ஷியலா வைக்கச் சொல்லிருந்தாங்க. அதான் " என தெரிவிக்க, ‘எனக்குமாய்யா காட்டாம மறைச்சி வைக்கச் சொன்னாங்க?’ என்று டென்க்ஷனிலும் குபீரென சிரித்துவிட்டராம். 

English Summary

edappadi scolding collector rohini


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal