திமுகவின் தோல்வியை மறைக்க பிரசாந்த் கிஷோரின் வியூகம்! அலறும் அதிமுகவினர்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த 27 மாவட்டங்களுக்கான ஊரக அமைப்பு உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி  மாவட்ட கவுன்சிலர் பொறுப்புகளிலும், ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புகளிலும் சிறிதளவு அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்தது,  அனைவரையும் கவனிக்க வைத்தது. இந்த வெற்றியானது திமுகவின் அபார வெற்றி என திமுக ஐடி விங்கும் அதனை சார்ந்த ஊடகங்களும் பரப்பி வருகின்றனர். அதேசமயம் அதிமுக அணி படு தோல்வி அடைந்ததாகவும் எழுதிவருகிறார்கள். 

இதன் பின்னணியில் திமுகவில் ஆலோசகராக அண்மையில் இணைந்த பிரசாந்த் கிஷோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், இருப்பினும் பெற்ற வெற்றியை வைத்து அதிமுக அணி தோல்வி அடைந்ததாகவும் திமுக வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பதால், அதிமுக அணி தோல்வி தோல்வி என பரப்ப வேண்டும் என கிஷோர் திட்டமிட்டிருப்பதாகவும், அதன்படி திமுக ஆதரவு ஊடகங்களை அழைத்து , அவ்வாறான செய்திகளை வெளியிடுமாறு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் திமுக அபார வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் புள்ளி விவரங்கள் படி இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் கடந்த எட்டரை வருடங்களாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லை. அதைப்போல கடந்த 6 ஆண்டுகளாக திமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. மத்தியில், மாநிலத்தில்  ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி வாக்குகளை முழுமையாக திமுக கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் கைப்பற்றவில்லை. 

அரசுக்கு எதிரான வாக்குகள் முழுமையாக எதிர்க்கட்சிகள் கைப்பற்றுவது தமிழகத்தில் வாடிக்கையான ஒன்று. ஏனெனில் 1991 1996 2001 2011 போன்ற தேர்தலை கணக்கில் கொண்டால் தமிழகத்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பது தொடர்ந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த  2016 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் அவ்வாறு நடக்கவில்லை. ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே பிரதிபலித்தது. இதுவரை திமுகவினர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிருப்தி வாக்குகள்  தான் திமுக அணியை தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்ற வைத்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து ஆறு மாதங்களில் திமுக அணி ஆனது பல மாவட்டங்களில் பின்னடைவை சந்தித்து, மீண்டும் அதிமுக அணியின் கையே மேலோங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. இந்த தேர்தலில் அதிமுக அணியின் எழுச்சியானது திமுகவிற்கு அதிர்ச்சியளித்ததன் காரணமாகவே திமுக வெற்றி பெற்று விட்டதாகவும், அதிமுக அணி தோல்வி அடைந்ததாகவும் திட்டமிட்டு செய்திகளை பரப்ப வேண்டும் என கிஷோர் திட்டம் வகுத்துக் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படியே தற்போது திமுகவின் ஐடி விங்கும் களத்தில் இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. 

உண்மையில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள திமுக, அதனையும் முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையில் தான் திமுக இருக்கிறது என்பது உறுதியாகிறது. அதேபோல வடமாவட்டங்களில் 7 மாவட்டங்களில் தேர்தல் நடக்காத நிலையில் பெரும்பாலான இடங்களில் அதிமுக அணியின் கையே ஓங்கி நிற்கிறது. அதேசமயம் திமுக அதிக அளவில் வெற்றி பெற்ற மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து பிரிந்து கட்சி நடத்தி வரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கணிசமான வாக்குகளை பிரித்தது. அதன் காரணமாகவே திமுக அணிக்கு அதிக அளவிலான வெற்றிகள் கிடைத்து இருப்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. 

திமுகவிற்கு மக்களவை தேர்தலில் கிடைத்த  ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய முடியாமல் மீண்டும் அதிமுகவிடம் இழந்திருப்பது இந்த உள்ளாட்சித் தேர்தலில் முடிவுகள் காட்டுகிறது. மேலும் இந்த தேர்தல் முடிவானது விரைவில் நடைபெற உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் பிரசாந்த் கிஷோரின் இந்த திட்டமிட்ட அதிமுக அணி தோல்வி விளம்பர வியூகம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk spread fake news in their support media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->