12 பேரை உடனடியாக நீக்கி அதிரடி நடவடிக்கை! ஸ்டாலினையே ஏமாற்றிய திமுகவினர்! அம்பலமான உள்ளடி விவகாரம்! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழக அளவில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. போட்டியிட்ட 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றிக்கு பின்னால் இருப்பது மு க ஸ்டாலின் பிரசாரம், திமுகவில் திடீரென உதயமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் என தமிழக ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அப்படித்தான் பணிகள் கொடுக்கப்பட்டதோ என்னவோ? 

உண்மையில் வெற்றியின் பின்னணியில் இருப்பது ஒரு தனியார் நிறுவனம் என தற்போது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது திமுக. இந்த முறை வேட்பாளர் தேர்விலும், தேர்தல் பிரச்சாரத்திலும் சரியான வியூகம் அமைக்க அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது. 

அதன்படி களமிறக்கப்பட்ட நிறுவனம் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களை தேர்வு செய்தது. அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை, படித்தவர்கள் எண்ணிக்கை, வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை, கூலி வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை, போன்ற பல முக்கிய தரவுகளை கையில் எடுத்துள்ளார்கள். அதேபோல இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தலில் அங்கே திமுக தனியாக எவ்வளவு வாக்குகள் வாங்கியுள்ளது? எந்த எந்த கூட்டணியில் இருந்து எவ்வளவு வாக்குகள் வாங்கியுள்ளது? உட்பட அனைத்து விவரங்களையும் அந்த நிறுவனம் சேகரித்துள்ளது. 

அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, அந்த வேட்பாளர்களுக்கு அந்த தொகுதியில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு, குடும்பத்திற்கு இருக்கும் நற்பெயர்கள்,  தீய பெயர்கள், அவர்கள் மேல் இருக்கும் வழக்குகள், அவர்கள் கலந்து கொண்ட போராட்டங்கள், செய்த மக்கள் நலப்பணிகள் முதலியவற்றை கணக்கில் கொண்டு, தொகுதிக்கு மூன்று பேரை ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்வு செய்து திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளார்கள். 

அதிலிருந்துதான் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 வேட்பாளர்களில் 6 பேர் வாரிசு வேட்பாளர்களும், ஐந்து பேர் ஏற்கனவே முன்கூட்டியே எம்பியானவர்கள். 9 பேர் மட்டுமே புதுமுகங்களாக களமிறக்கப்பட்டார்கள். இவர்களைத்தான் அந்த நிறுவனம் தேர்வு செய்து அனுப்பி உள்ளது. இதில் முக்கியமாக வேட்பாளர்கள் எவ்வளவு பணம் செலவு செய்வார்கள் என்ற கணக்கீடும் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் தற்போது விஷயம் என்னவென்றால், எம்பி சீட்டுக்கு ஆசைப்பட்ட திமுகவினர், ஸ்டாலின் ஒப்பந்தம் போட்ட நிறுவனத்தின் ஊழியர்களை வளைத்து அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, எங்களுக்கு சீட்டு பெற்று தர உதவ வேண்டும் என அவர்கள் இடத்திலேயே முறைகேட்டை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

இதனை தெரிந்துகொண்ட ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். நாம் ஒருவரை நம்பினால், அவர்களும் சேர்ந்து நம்மை ஏமாற்றி விட்டார்களே என ஸ்டாலின் புலம்பியுள்ளார். இதனையடுத்து அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தரகரை அழைத்து இது குறித்து ஸ்டாலின் விவாதிக்க, இது குறித்து அந்த நிறுவனத்தில் விசாரணை நடத்தியபோது 12 ஊழியர்கள் திமுகவினரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமான ரிப்போர்ட் இணைத்து திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளதாக தற்போது தகவல்கள் உலா வருகின்றன. 

அந்த 12 பேரையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பியுள்ளது அந்த தனியார் நிறுவனம். இதில் அதிகம் அதிர்ந்து போனது ஸ்டாலினின் மருமகன் தான் எனவும், அவருடைய மேற்பார்வையில் தான் இந்த பணிகள் நடைபெற்றதாகவும், எனக்கே தண்ணி காட்டிவிட்டார்களே எனவும் அறிவாலயம் வட்டாரத்தில் புலம்பி வருகிறார்களாம்.. 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அதுவும் மக்கள் சேவை செய்வதற்காக, எவ்வாறெல்லாம் பாடுபடுகிறார்கள்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk persons try to get MP seat by illegal way


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->