தேர்தல் முடிவு : ஒரே நாளில் உச்சத்திற்கு போன ஸ்டாலின்! நம்ப முடியாத உற்சாகத்தில் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஏழாம் கட்டமாக நடந்து முடிந்த மே 19ஆம் தேதி, அன்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியது. கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்க, அந்த செய்தியானது அடுத்த நாள் மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்தது. பங்குச் சந்தை வரலாறு காணாத உயரத்தை எட்டி பிடித்தது. 

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து, அடுத்த பிரதமர் மோடி தான் என்ற செய்தி பரவி கொண்டிருக்க, கார்ப்ரேட் சந்தை ஆனது அசுர வேக உற்சாகத்தில் இயங்க ஆரம்பித்தது. மே 20, திங்கட்கிழமை காலை மும்பை பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியது. 

பங்குசந்தையில் ஏற்பட்ட மாற்றத்தில் அதிக பலனடைந்தது யார் என்றால்? பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் அதானி குழும பங்குகள் தான் மிக அதிக உயரத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் மட்டும் 17 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. 

சுமார் ஒரு கோடி பங்குகள் விலை உயர்வின் மூலம், அதானி மற்றும் அம்பானி உட்பட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு அன்று ஒரு நாளில் மட்டும் கிடைத்த லாபம் ஆனது லட்சக்கணக்கான கோடிகள் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அந்த ஒரு நாள் ருசி தான் அடுத்த அரசையே தீர்மானிக்க போகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற அளவில் தான் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

எத்தனை கருத்துக்கணிப்புகள் வந்தாலும், அரசு தரப்பிலும் உளவுத்துறை மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிகபட்சமாக 223 இடங்கள் வரை  பிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி ௨ள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா.

தமிழகத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் படி, திமுக அணியே அதிகமான மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டு வருகிறது. பாஜக அரசுக்கு பெரும்பாண்மை கிடைக்காத பட்சத்தில் திமுகவின் உதவியை பாஜக கேட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பாஜகவின் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நிராகரித்த திமுகவை நோக்கி, அடுத்தகட்ட வலையை அதிரடியாக வீசியிருக்கிறது பாஜக.. என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

அதன்படி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம், அதாவது தேர்தலுக்கு முன்னர் பாஜகவுடன் கூட்டணி பேசியவர்களிடம், மீண்டும் அமித் ஷாவிற்கு நெருக்கமான பாஜக பிரமுகர் பேசியுள்ளார். அதில் பாஜக அரசை திமுக ஆதரிக்கும் பட்சத்தில் ரூபாய் 5,000 கோடி வரை தருவதாக பேரம் பேசத் தொடங்கியுள்ளனர். இதனைக்கேட்ட ஸ்டாலின் வாயடைத்து போனாராம். 

தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்க கட்சிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவியது. ஆனால், இப்போது ஆட்சியை தக்கவைக்க, புதிய அரசு அமைப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த டீலிங் குறித்து ஸ்டாலின், திமுக சீனியர்களுடனும், கலைஞரின் செயலாளர்களாக இருந்தவர்களிடமும் விவாதித்துள்ளார். அதற்கு அவர்களும் இதுபோல டெல்லியில் இருந்து பேசப்படுவது இது தான் முதன்முறை என்றதும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார். 

இந்த டீலிங் ஸ்டாலினுக்கும் மட்டும் அல்லாது அண்டை மாநிலத்தில் கோலோச்சும் இளம் தலைவரிடமும் பேசப்பட்டுள்ளதாம். மேலும் இரண்டு கட்சிகளுக்கும் சிபிஐ வழக்குகளை கூட நினைவுபடுத்தியுள்ளதாம். இறுதி டீலிங்காக வெளியில் இருந்து ஆதரித்தால் போதும் என்ற தகவலும் அனுப்பப்பட்டுள்ளதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp bargain dmk for form the govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->