அதிமுக உட்கட்சி பிரச்சனை, ஓபிஎஸ், இபிஎஸ் உடன்பாடு! கலக்கத்தில் திமுக!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வெளிப்படையாக வைக்கப்படுகிறது. தற்போது கொரோனா காலத்திலும் அமைச்சர்களிடம் இந்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்க தயக்கம் காட்டுவதில்லை. இது அதிமுகவில் கலகத்தை உண்டாக்கும், திமுகவின் மறைமுக திட்டம் எனவும் கூறப்படுகிறது. அமைச்சர்களின் முரண்பட்ட பதிலால் அதிமுக தலைமையில் நெருக்கடி ஏற்பட்டு, அடுத்தடுத்து விவாதங்கள் முடிந்து, பொதுவெளியில் முதல்வர் வேட்பாளர் பற்றி பேச கூடாது என கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தான் முதலமைச்சரை  தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது. அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மறைமுகமாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருதரப்பும் அதிமுக சார்பாக சம எண்ணிக்கையில் வேட்பாளர்களை களம் இறக்குவார்கள் என்பதே முதல் திட்டமாக கூறப்படுகிறது. 

இருதரப்பில் எந்த தரப்பு, அதிக அளவில் உறுப்பினர்களை வெற்றி பெற வைக்கிறதோ, அவரே முதல்வர் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்கள் ஓபிஎஸ்க்கும், மேற்கு மாவட்டங்கள் இபிஎஸ்க்கும் பிரிக்கப்பட்டு, வட மாவட்டங்கள் சமமாக பங்கிடப்படும் எனவும் தெரிகிறது. 

முதல்வர் மறைமுகத் தேர்தலாக பெரும்பான்மை சமஉக்களைப் பெற்ற கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை.  சில திமுக ஆதரவு நபர்களால் அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்தவே முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை உருவாக்கப்படுகிறது என அதிமுக தரப்பில் விவாதிக்கபட்டாதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இது நமக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது, தேர்தல் நேரத்தில் சச்சரவுகள் இல்லாமல், முன்கூட்டியே நாம் திட்டமிடும் சூழல் அமைந்தது நமக்கு நன்மையே என மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் அதிமுகவினர். அதிமுகவில் கலகம் ஏற்படும் என காத்திருக்கும் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK 2021 election plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->