தமிழகத்தில் இன்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19ஆம் தேதி தொடங்கி இருந்தது. ஆனால், கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் காரணமாகவும் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால், தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, தேர்வுத்துறை திருப்புதல் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு இன்று முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று தமிழ் பாடத் தேர்வு நடைபெறுகிறது. நாளை 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆங்கிலத் தேர்வு நடைபெற இருந்தது. 

இந்நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் ஆசிரியருக்கு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நடைபெற உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில பாட திருப்புதல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, வரும் 17 ஆம் தேதி அன்று நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 10th and 12th class revision exam start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->