தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி மாற்றம்.. கூடுதல் விடுமுறை! பள்ளி கல்வி துறை அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வாக்குப்பதிவு முடிந்ததும், ஜனவரி 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அரையாண்டு விடுமுறை முழுக்க ஆசிரியர்கள் அனைவரும் தேர்தலை வேலைக்காக தேர்தல் வேலையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையுடன் தேர்தல் வேலைக்கான நிறைவு கட்டத்தை எட்டுகிறது.

எனவே அன்றைய தினமே ஆசிரியர்கள் பணிக்கு செல்வது மிகவும் கடுமையாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கையின் இரண்டு நாட்களாக நீடிக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு, மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே தேர்தல் பணி வாக்கு எண்ணிக்கை போன்றவை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் ஜன 4 தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school opening date for january 4


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->