இளைஞர்களே ரெடியா... திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ்க்கு மாபெரும் ஆட்சேர்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 19ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 

ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு தகுதிகள்:

ஓட்டுநருக்கு உண்டான தகுதிகள்:

•10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். •அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

•தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

•162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். 

•இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

•மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு.

இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்:

• பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்.சி‌. விலங்கியல், தாவரவியல் பயோ வேதியியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

மாதம் ஊதியம்: ரூ.15,435 

வயது: நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு. 

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். 

மேலும் விவரங்களுக்கு 044 - 28888060/75/77 அல்லது 7397701801 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Recruitment Camp for 108 Ambulance in Thiruvarur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->