நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதாரத் துறை! - Seithipunal
Seithipunal


நீட் முதுகலை கலந்தாய்வில் மேலும் கூடுதல் இருக்கைகளை சேர்ப்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் ஜூன் 2-ம் தேதி வெளியாகின. இதனை தொடர்ந்து 50 சதவிகித அகில இந்திய மருத்துவ இடங்களுக்கும், 50 சதவிகித மாநில இடங்களுக்கும் கலந்தாய்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தரவரிசைப் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்க முடியாது. என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நீட் முதுகலை கலந்தாய்வில் மேலும் கூடுதல் இருக்கைகளை சேர்ப்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Postponement NEET Post Graduate Consultation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->