தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் திடீர் மாற்றம்... வெளியாக போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 

மேலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், காப்பாளர், சமையலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்தும், அவர்களை வரவேற்பது குறித்தும் நான் விவாதித்தேன். ஆனால் பிளே ஸ்கூல், எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும், நர்சரிப் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தபடி, நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nursery school open date change


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal