நெருங்கும் பொதுத்தேர்வு.. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?  - Seithipunal
Seithipunal


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தேர்வில் அவர்கள் செய்யும் சிறு தவறுகள் என்ன? எளிதாக தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

படித்ததை எல்லாம் வெளிப்படுத்துவதற்கு அல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவது தான் நல்ல விடைகள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். இது முற்றிலும் தவறு. ஏனெனில் முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும், கேட்கப்பட்டிருக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டும் படித்துவிட்டு எழுதியதால் இதுபோன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, வினாத்தாளை முழுவதுமாக ஒருமுறைக்கு இருமுறை பொறுமையாக வாசிக்க வேண்டும்.

வினாத்தாளை நன்றாக வாசித்தவுடன் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம் சிறந்த தாக்கமாக அமைய அதாவது கசைளவ iஅpசநளளழைn ளை வாந டிநளவ iஅpசநளளழைn என்பதை ஏற்படுத்த நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.

நன்றாக தெரிந்த வினாவிற்கு பதிலை எழுத தேவைக்கு அதிகமாக நேரத்தை வீணடித்து விடக்கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும்.

விடைத்தாளில் அடித்தல் திருத்தலுடன் எழுதுவதை தவிர்க்க வேண்டும். அடித்தல் திருத்தலுடன் எழுவது நீங்கள் செய்யும் தவறை எளிதில் சுட்டிக்காட்டிவிடும். பொதுத்தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில் வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பார்க்காமல் எழுதிவிடுவது நாம் பரீட்சையில் செய்யும் பல தவறுகளை அடையாளம் காட்டிவிடும்.

தேர்வில் அழகாக மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம் குறைகிறது. அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.

ஒரு பதிலில் உள்ள முக்கியமான கருத்துக்களை அடிகோடிட்டு காட்டுவதன் மூலம் மதிப்பெண்களை அதிகரிக்க இயலும்.

அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்து பாகங்களையும் கட்டாயம் குறித்து காட்டுங்கள். (இதற்காக அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம்).

எவ்வாறு கேள்வித்தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்கக்கூடாதோ அதைப்போலவே கடைசி வினாடி வரை எழுதக்கூடாது. குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்து விட வேண்டும்.

தேர்வை எழுதி முடித்த பின் ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரிபார்க்கவும்.

ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். கணிதமாக இருந்தால் விடையின் கடைசியை அல்லது தீர்வை அடிக்கோடிட்டு உள்ளீர்களா என்பதை சரிபார்க்கவும். சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

கடின உழைப்பும், அதிகமாக பயிற்சி தேர்வுகளை எழுதுவதும் உங்கள் மதிப்பெண்களை கூட்ட உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to get highest marks in public exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->