போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு.!! விண்ணப்பிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது அந்த வகையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆர்.ஆர்.பி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மூலம் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 பேருக்கும் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணைய உள்ள மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆறு மாத காலத்திற்கு இந்த பயிற்சி வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் பதினைந்து பதினெட்டு வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வாய் மையங்களில் உணவு மற்றும் தங்கும் இடம் வசதி இல்லை என்றும் பயிற்சி சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in என்ற இணையதளம் வழியாக வரும் ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 044-2595 4905 மற்றும் 044-2851 0537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free competitive exam coaching class


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->