சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனை வளாகத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழக அரசின் ஒதுக்கீட்டில் ஆயுர்வேத, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற ஐந்து மருத்துவ படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 21 இடங்களும், மற்ற பிரிவினருக்கு 259 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று தமிழகத்தில் உள்ள 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,660 இடங்கள் உள்ளன. இதில் 762 இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிலும், 425 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும், 822 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டிலும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 115 இடங்களும் உள்ளன. இதுவரை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக 2,756 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் தகுதியான 2,573 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayurveda siddha Medical Courses Rank List Released


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->