2022-2023 கல்வி ஆண்டில் மருத்துவம் பயில போகும் 569 அரசு பள்ளி மாணவர்கள்! - Seithipunal
Seithipunal


7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவராக போகும் அரசு பள்ளி மாணவர்கள்!

நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என 7.5% உள் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

அதே கல்வியாண்டில் செயல்படுத்தப்பட்டு 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம படிப்பில் சேர்ந்தனர். 2021-2022 கல்வியாண்டில் 555 அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து உள்ளனர்.

இந்நிலையில் 2022-2023 கல்வியாண்டில் 569 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் பயில உள்ளனர். அதில் 455 பேர் மருத்துவமும் 114 பேர் பல் மருத்துவமும் படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு இல்லாத போது கூட இவ்வளவு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான். நீட் தேர்வில் தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் ஆண்டுதோறும் மருத்துவம் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

569 government school students will study medicine in the academic year 2022-2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->