11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! 144 தடை அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாற்றம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

தமிழகத்தில் மாணவர்களின் நலன்கருதி 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பலரும் வந்தனர். இந்நிலையில் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய 11, 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 30 நிமிடங்கள் தாமதமாக காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.    

தற்போது வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாவும், நாளை நடைபெறும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவானது நாளை முதல் அமலுக்கு வர உள்ள 144 தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை இந்த உத்தரவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 th std public exam postponed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->